chrome :

type in address bar  –   for enable disable plugin    –   chrome://plugins/

sdfsd

ஏ.ரீ.எம். முர்ஷித்

எம்மில் அதிகமானோர் அல்லது அனைவருமே வாழ்கையில் வெற்றியாளர்க ளாக, சாதனையாளராக மாற வேண்டும் என ஆசைப்படுகின்றோம். அது அடைய முடியாத அல்லது சாதிக்க முடியாத ஒன்றல்ல. நிச்சயமாக அந்த ஆசையை, இலக்கை அடைந்து கொள்ளலாம். ஆனால், அதற்காக எம்மைப் பயிற்றுவிக்க வேண்டும். சுய ஆளுமை விருத்தி குறித்து அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்தேர்ச்சையான பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் நாம் அடைய விரும்புகின்ற, சாதிக்க விரும்புகின்ற இலக்கை அடைந்து கொள்ள லாம், சாதனைகள் புரியலாம்.

 

எனவே, ஆளுமை விருத்திக்கான 10 வழிமுறைகளை இக்கட்டுரையில் நோக்குவோம்

(1) கனவு காணுதல் – (Take time to dream)

எதிர்காலத்தில் தான் அடைய விரும்புகின்ற, சாதிக்க நினைக்கின்ற இலக்கு கள், சாதனைகள், அடைவுகள் குறித்து கனவு காண வேண்டும். எமது இலக்கை அல்லது இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முதல் எட்டு கனவு காண்பதாகும். அதற்காக நாளாந்தம் சிறிது நேரம் ஒதுக்கப்பட வேண்டும். அதனை நேர விரயம் என்று சிந்திக்க வேண்டி யதில்லை. மாற்றமாக அதுவே, இலக்கு நோக்கிய முதலாவது முதலீடாகும்.

இலக்குகள் தெளிவின்றி இருக்கின்ற நிலையில் மாற்றம், முன்னேற்றம் குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது? எனவே, இலக்குகளை மிகத்தெளிவாக வரையறுத்துக் கொள்வதுடன் அது குறித்து கற்பனை செய்வது, கனவு காண் பது அவசியம். குறித்த காலத்தில் நான் எந்த நிலையிலிருப்பேன்? எவ்வாறான சாதனைகளை அடைந்திருப்பேன் என கற்பனை செய்யவேண்டும்.

ஒரு முறை உமர் (றழி) அவர்கள் மதீனாவிலே சில ஸஹாபா தோழர்களு டன் ஒரு வீட்டிலே ஒன்று கூடியிருந்த வேளை தோழர்களைப் பார்த்து உமர் (றழி) அவர்கள், ‘உங்களது விருப்பங்களை, ஆசைகளைக் கூறுங்கள்’ எனக் குறிப்பிட்டார்கள். அப்போது தோழர்களில்  ஒருவர்,  ‘இந்த வீடு தங்கத்தால் நிரம்பியிருந்து அதனை நான் அல்லாஹ்வின் பாதையில் முழுமையாக செல வளிக்க விரும்புகின்றேன்’ எனக் குறிப்பிட்டார். உமர் (றழி) மீண்டும் “உங்கள் ஆசைகளைக் குறிப்பிடுங்கள்” எனக் குறிப்பிட்டார்கள். அடுத்தவர் “நான் இந்த வீடு முழுவதும் முத்து,மரகதம்,இரத்தினக் கற்களால் நிறைந்திருந்து அவை அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கு  விரும்புகின் றேன்” எனக் குறிப்பிட்டார். மீண்டும் உமர் (றழி) அவர்கள் “உங்கள் ஆசைக ளைச் சொல்லுங்கள்” எனக் குறிப்பிட, அவர்கள் அனைவரும் “இதற்கு மேல் கூறுவதற்கு எமக்கு எதுவும் தெரியாது” என்றனர். அப்போது உமர் (றழி) அவர்கள் “இந்த அறை  அபூ உபைதா பின் ஜர்ராஹ், முஆத் பின் ஜபல், ஸாலிம் போன்ற மனிதர்களால் நிரம்பியிருப்பதனையும் இறை தூதை ஓங்கி ஒலிக்கச்செய்யும் பணியில் அவர்கள் எனக்கு உதவுவதையும் விரும்புகின் றேன்” எனக் குறிப்பிட்டார் கள்

(2). குறிப்புப் புத்தகமொன்றை வைத்துக் கொள்ளல் (Keep a Journal)

ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதற்கான மிக முக்கிய வழிமுறைதான், தனது இலக்குகளையும் அதற்கான படிமுறையான எட்டுகள் மற்றும் நாளாந்த செயற் பாடுகளையும் குறித்து வைத்துக் கொள்வதாகும். இவ்வாறு குறித்துக் கொள்வதானது, தான் அடைய விரும்புகின்ற கனவின் (இலக்கின்) அசைவு களை, மாற்றங்களைப்  பதிவு செய்வதற்கும் அப்பயணத்தின் அடைவுகளைக் குறித்துக் கொள்வதற்குமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது. அத்துடன் தான் அடைய விரும்புகின்ற இலக்குகளுக்கான தொடர்ந்தேர்ச்சையான முன்னேற்றத் திற்கான மிகச் சரியான பாதையைக் காட்டித்தருகின்றது.

3.தவறுகளைச் செய்தல் (Make mistakes)

தவறுகள், பிழைகள் செய்யாத அல்லது பின்னடைவுகளைச் சந்திக்காத மனித னைக் காணவே முடியாது. அனைவரும் பிழை விடக்கூடியவர்கள். பிழைகள், தவறுகள் இடம்பெறக் கூடாது என எண்ணுகின்றவர்கள் எதனையுமே சாதிக்க மாட்டார்கள்.சாதிக்க விரும்புகின்றவன், அடைவுகளைக் காண விரும்புகின்ற வன் இயங்கக் கூடிய வனாக, செயற்படக் கூடியவனாக இருப்பான். சிலபோது ஆபத்தான பாதைகளிலும் பயணிக்க வேண்டியிருக்கும்.

ஆளுமை விருத்தி, தனிப்பட்ட திறன்களையும் ஆற் றல்களையும் வளர்த்துக் கொள்கின்ற முயற்சியில் பிழைகள் நிச்சயம் இடம்பெறும். அது இயல்பானது. அந்தத் தவறுகள், பிழைகளிருந்து பாடங்களையும் படிப்பினைக ளையும் கற்றுக்கொண்டு அடுத்த எட்டினை எவ்வாறு வைக்கலாம் என்று யோசிப்ப வன்தான் சாதிப்பான்.

இது குறித்து Albert Einstein தனது வாழ்வின் அனுப வத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடும் போது ‘சிலர் தமது வாழ்வில் ஒருபோதும் தவறுகளை செய்த தில்லை என உணர்வார்களானால் அதன் கருத்து அவர்கள் ஒரு போதும் தமது வாழ்க்கையில் புதிய விடயமொன்றை செய்ய முயற்சித்த தில்லை என்பதாகும்’ எனக் குறிப்பிடு கின்றார்.

4 தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல் – (Learn from your mistakes)

எமது இலக்குகள் நோக்கிய பயணத்தில் தவறுகள், பிழைகள் இடம்பெற முடியும், நிச்சயமாக இடம்பெறும். ஆனால் இடம்பெறும் தவறுகள் பிழைகள், எப்படி இடம் பெற்றது என ஆராய்ந்து பார்ப்பது மிக முக்கியமானது. அதிலி ருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். தவறு களும் பிழைகளும் எமது பயணத்தின் படிக்கட்டுகள்.

நான் எங்கே  பிழைவிட்டேன்,தவறு ஏன் இடம்பெற்றது?… நான் பின்னடைவ தற்கான காரணம் என்ன?… போன்ற கேள்விகளுக்கு மிகச்சரியான விடைக ளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிரகாரம் அடுத்த எட்டுகளை மிக நுணுக்கமாக அமைத்துக் கொள்கின்ற போது வெற்றி அல்லது இலக்கு நோக் கிய பாதை இலகுவாக அமையும்.

Thomas Alva Edision பல சாதனைகளைச் செய்தவர். அவர் குறிப்பிடும் போது ‘நான் ஒரு போதும் 1000 தடவைகள் தோற்றேன் என்று சொல்லமாட்டேன். மாற்றமாக தோல்வி அடைவதற்கான 1000 வழிகளைக் கண்டுக் கொண் டேன்’ என்கிறார்

ஒரு முஸ்லிம் ஒரு புற்றில் இரண்டு தடவைகள் தீண்டப்பட மாட்டான். அந்தவகையில் ஒரு தவறை பல தட வைகள் செய்ய மாட்டான். இடம்பெற்ற தவறிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்வான்.

தனது பிழைகள், தவறுகளைக் கவனத்திற் கொள்ளாது தற்பெருமை அல்லது தன்னைப் பற்றிய அளவுகடந்த மேலெண்ணத்தோடு செயற்படுகின்ற போது தொடர்ந்தும் அதே பிழைகள் இடம்பெறும். தனது பிழைகள்,தவறுகள் குறித்து முதலில் ஏற்கின்ற மனப்பான்மை இருக்க வேண்டும். அந்நிலை இல்லாத போது ‘மாற்றம்’ ஏற்பட இடமில்லாது போகின்றது.

5. பணிவு – (Stay hamble)

பணிவு எப்போதும் நல்ல விளைவுகளையே கொண்டு வரும். எல்லோராலும் பணிவாக நடப்பது மிகக் கஷ்டமானது. அதேபோன்று எல்லா நிலமைகளிலும் பணிவுடன் நடந்து கொள்வதும் கடினமானது.

பணிவு எல்லோரிடமும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்று. குறிப்பாக கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் பெற்றிருக்க வேண்டியதாகும்.தனக்கு எல் லாம் தெரியும் அல்லது தான்தான் எல்லாம், நான் பணிந்து போக வேண்டி யதில்லை என சிந்திப்பது பல வழிகளிலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி விடுகின்றது. எப்போதும் பணிவுடன் நடந்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே அனைத்தையும் அறிந்தவர் என நினைத்தால் அதனைக் கற்றுக் கொள்வதும் வளர்த்துக்கொள்வதும் கஷ்டமாகும்.

6. தன்னம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தல் (make self- confidence a priority)

தன்னம்பிக்கையை (self-confidence) வளர்த்துக் கொள்வதை, சுய ஆளுமை விருத் திக்கான இலக்குகளில் ஒன்றாக ஏற்படுத்திக் கொள்ளலாம். தன்னம்பிக்கை; சாதனை நோக்கிய பயணத்தின் மிக முக்கிய கட்டுச் சாதனம். தன்னம்பிக் கையை வளர்த்துக் கொள்ள தொடர்ந்தேர்ச்சையான பயிற்சியும் அவசியம். இது குறித்து  சிறுவயது முதலே கவனம் செலுத்துவது பிரயோசனம்மிக்கது.

தன்னம்பிக்கையை வளர்ப்பதில் விளையாட்டு கணிசமான பங்கு வகிப்பதாக இத்துறைசார் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்… தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வழி அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்காதிருப்பதாகும்.

7.எப்போதும் நேர்மையாக நடந்துக்கொள்ளல்

எமது கனவுகளும் ஆசைகளும் தவறான, பிழையான வழிமுறைகளினூடாக நிறைவேறுமெனில் அது எவ்வளவு வெட்கமான செயல். எனவே நாம் எப்போ தும் எமக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எமது மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட வேண்டும்.

ஏனையவர்கள் குறித்த வேலையை செய்கிறார்கள்  என்பதற்காக தனக்கும் அவ்வாறு செய்ய முடியும் என போலியாக வெளிக்காட்ட வேண்டியதில்லை. அடுத்தவர்களைப் பார்த்து தமது செயற்பாடுகளை, இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டியதில்லை. அது முற்றிலும் பிழையான வழிமுறை. எதிலும் நேர்மை யாக நடப்பது  முடிவெ டுப்பது உண்மையான வெற்றிக்கான அடிப்படை

8. அதிகம் வாசித்தல்

நீங்கள் எந்தத் துறையில் அல்லது துறைகளில் வெற்றியடைய விரும்புகின் றீர்களோ அந்தத் துறைகள் தொடர்பான புத்தகங்கள், சஞ்சிகைகளை அதிகம் வாசிக்க வேண்டும்.

முதலில் தனது பிரத்தியேகமான ஆர்வமுள்ள துறை களை மிகச்சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண் டும். குறித்த துறைகளோடு தொடர்பான சிறந்த நூல் களைத் தேடி வாசிக்கின்ற பழக்கம் முக்கியமானது. அந்த நூல்க ளினூடாக பெறுமதியான அனுபவங்களை, வழி காட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறே தனது வாசிப்பினையும் தேடலையும் குறித்த  துறைகளோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளாமல் பொதுவான, விரிந்த வாசிப்பையும் பழக்க மாக்கிக் கொள்ளல் வேண்டும். மட்டுமன்றி, தேசிய சர்வதேச நிலமைகள், சமகால அரசியல் போக்குகள் குறித்த அறிவையும் பெற்றிருப்பது சிறந்தது.

9. சுற்றியுள்ளவர்களை மறந்துவிட வேண்டாம், அல்லது அவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்

உங்களது இலக்கு நோக்கிய பயணத்தில் ஏணிப்படிகளாக இருப்பவர்கள் உங் கள் அங்கத்தவர்கள், உனது நண்பர்கள், உங்களைச் சுற்றியிருப்பவர்கள். எனவே அவர்களை மறந்து விடா வேண்டாம். அவர்களது உதவியும் ஆதர வும் இல்லாமல் தனித்து நின்று முன்னோக்கி நகர்வது கடினமானது.

10.எப்போதும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டல்

ஏனையவர்களிடமிருந்து புதிய விடயங்களை அல்லது அறியாத, விளங்காத விடயங்களை கேட்டு அறிந்து கொள்ளக் கூடியவனாக , கற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும். எமக்கு தெளிவில்லாத விளங்காத விடயங்  கள், தெளிவுகள் ஏனையவர்களிடம் இருக்கலாம். அவ்வா றான விடயங்களை தயக்கமின்றி கற்றுக்கொள்வதில் ஆர்வமிருக்க வேண்டும். அல்லது நாம் பல புத்தகங்களை புரட்டிப் படிக்க வேண்டிய பல பெறுமதியான அனுபவ அறிவு கள் இருக்கலாம். ஆனால் சிலபோது அவ்வாறான வர்கள் சமூகத்தில் அறி முகமற்றவர்களாக சமூகம் பெறும தியான மனிதர்களாக பார்க்காதவர்களாக இருக்கலாம். ஆனால் எமக்கு அவரது அறிவு அனுபவம் பிரயோசனமளிக்கு மெனில் நாம் அவரிடம் போய் அது குறித்த விடயங்களை எடுத்துக் கொள்வ தில் ஒரு போதும் பின்னிற்கக் கூடாது. அல்லது குறித்த நபர் எம்மை விட பலவகையிலும் தரம் குறைந்தவராக, வயதில் இளையவராக இருக்கலாம். இவ்வாறான நிலைமைகளில் நாம் புதிய விடயங்களைக் கற் றுக் கொள்வ தன் அவசியத்தை விளங்கி எந்தவித தயக்கமு மின்றி பயனடைய வேண்டும். எப்போதும் தேடல் கற்றலில் ஈடுபாடு இருக்கின்ற போது எமது வாழ்வில் எம்மை யறியாமலேயே மாற்றம், முதிர்ச்சி ஏற்படும்.

அவ்வாறே மனிதன் எப்போதும் தேடலில் வாசிப்பில் ஈடுபடக் கூடியவனாக இருக்க வேண்டும். அதிலும் ஒருபடி மேலாக முஸ்லிமின் வாழ்வில் வாசிப்பு இரண்டறக் கலந்த ஒன்று. கல்வி, ஞானம் என்பன முஸ்லிமின் காணாமல் போன சொத்து, எங்கெல்லாம் அதனைக் காண்கின்றோமோ அதனை தேடிப் பெற்றுக்கொள்வதற்கு மிகத் தகுதியானவன் அவனே என ஹதீஸ் குறிப்பிடு கின்றது.

அறிவு வளர்ச்சி ஒருவனின் ஆளுமை விருத்தியிலும் கணிசமான பங்கை வகிக்கின்றது. அறிவு நிலை அதிகரிக்க அதிகரிக்க ஆளுமை விருத்தி, மனோ நிலை மாற்றம், சிந்தனைப் பாங்கு மாற்றத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங் கள் ஏற்படுவதனை அவதானிக்க முடிகிறது.

Thanks – http://vaikarai.meelparvai.net

 

தொழுகையை விட்ட என் சோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்..

உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ!

உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!. அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ!

நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ! அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ!

உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!    நன்றாகத் தெரிந்து கொள் சோதரனே! 

              நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் – எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா?! அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே! நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா!? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.

இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய்?, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?.

நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா?, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா?, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா?.

நீ அவனைச் சந்திக்கும் நாள் – அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா?. இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா?. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை நோன்பு இன்ன பிற வணக்கங்கள்.. அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே! நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே!. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே!.

அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?. அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது…

போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ!

நபியவர்கள் கூறினார்கள்…

இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)

தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள்’  எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்’ என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா?. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???  நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)

என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும் நேரம் கிடைக்கும் போது தொழுவதும் முனாபிக் – நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?

அல்லாஹ் சொல்கின்றான்…

நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை.  (நிஸாஃ 142ம் வசனம்)

நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா?

பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள், ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளிவாயலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!

கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப்பொழுது கூட அவை இருந்த தில்லையே!

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா? (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)

ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது.?, ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே?. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனச் சாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா?.

மனிதா! ஐயறிவுள்ள மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னை விட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும் அவற்றை விடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?

என்னருமைச் சோதரனே! நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார்?. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?

நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!

‘ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்)

தொழுகையைப் பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ?. கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்.

யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.’ (ஆதாரம் முஸ்லிம்)

அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!…

யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)

ஆகவே நண்பா! நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்!. இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே!

போதும் நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற வசிடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் . (அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா?

தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான். (ஸூரா அல் ஹதீத் 53)

ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டுவிட்டால் அவனது விடயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா?. இதோ கேள்!.

தொழுகையை விட்டவன் காபிராக ஆகி விடுகின்றான். அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது.  அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது. அவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மைய வாடியில் அடக்கம் செய்யவும் கூடாது. அவனுடைய மகளுக்கு வலியாக இருந்து திருமணம் முடிந்து வைக்கவும் கூடாது. அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.

அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை. அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக் கூடாது. அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்தத் திருமணத்தை ரத்துச் செய்ய வேண்டும். அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.

பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா?. ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா?

இன்றே நீ தவ்பாச் செய்வாயல்லவா? ஆம். அதைத் தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னைக் கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை . கடவுளை நம்பினார் கைவிடப்படார்.

அதே போல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்து விடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகி விடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்,

அல்லாஹ்வின் அருள் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.

ஆக்கம்: மௌலவி. முஹம்மது ஜலீல் மதனி

(விநியோகம்: இஸ்லாமிய நூலகம், சவூதி ஓஜர், சிகோனஸ்ட்கேம்ப் ரியாத்)

Mr.Rafeek M.K  wrote this…

Dears,

Assalamu Alaikum wr.wb. 

After reading this news , (we do read similar news but most of them usually are quite old), I felt like visiting the site and found it interesting and thought it worth sharing…  

Trust you too will find it enlightening. The point that strike me is whether anyone looking for answers for similar questions, if approached us (and in all the years we were alive, might any have approached us?), will we be lucky enough, pious enough, friendly enough, approachable enough, welcoming enough to guide likewise? Let us pray for the most merciful bestow His mercy on us and help us rise to higher ranks….

http://www.infocusnews.net/content/view/34417/1047/

By Natalia Mindru, Special to IFN   
I was born in a family that was raised in Moldova, in the Soviet Union, where being an atheist was a must. This was the reason my parents couldn’t teach me much about religion. But we would celebrate Easter, which would be the biggest religious event of the year. The rest of the year would be a “God-free” time. 

At the age of 17, I moved to Germany. I used to live close to my brother until I finished my pre-college courses. 

We used to celebrate Easter together once a year, and God would not be very much present in our lives other than that.

When I got accepted into medical school, I moved away from my brother and his wife, and right at the beginning of my first semester, something amazing happened to me.

I was lying in my bed at night and I could see the dark sky and the stars from my big window. 

Then I closed my eyes and I started to imagine the darkness of the universe.  I imagined our planet – a little balloon that rotates in the middle of nowhere – and I got scared. I knew that this was amazing, unbelievable and not normal.  

At that moment, I knew 100 percent that there is a God, and I knew that He created all that; it couldn’t be an accident.

But I wanted to know Him on a deeper level. 

I got up, went online and started to research, read, ask and write on forums.  

As time passed, I got more and more disappointed.  

Religions such as Christianity and Judaism did not make sense to me. I would spend so much time searching, and it was very painful not to find an answer.  

In desperation, I opened my window in the middle of the night and, crying, I asked God to show me His way. The next morning, when I went to my classes, I met an old friend who I used to study the German language with years earlier.

A Muslim from Palestine, named Islam Iraqi, suggested I read about the religion of Islam. He gave me books and, in his presence, I took my shahadah one year later, in Ramadan of 2005. 

I took my time to study the religion. I questioned everything, and I accepted it because the religion made sense. It was perfect.  
May Allah bless my brother, Islam, and reward him for his help. And I thank Allah that He answered my dua’a so quickly! 

Alhamdulillah ya rabbil-al-amin!

Natalia Mindru took her shahadah in October 2005 in Marburg, Germany. She now resides with her husband in Corona, Calif.

from Brother Mazherullah Ibrahim……

http://www.kids.farhathashmi.com

சில குறிப்புகள் மட்டும்

ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை. அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது.

 1. மூன்று வகையான ஹஜ்களில் எதைச் செய்ய அவர் முடிவுசெய்கிறாரோ, அதனைச் செய்வதாகவாயால் கூறி நிய்யத் செய்ய வேண்டும்.
 2. இஹ்ராமுடைய நாட்களில், முடிகளைக்களைவது, நகம் வெட்டுவது போன்ற காரியங்களைச்செய்யக் கூடாது என்பதால் இஹ்ராமுக்கு முன்பாகவே அவைகளைச் செய்து விடவேண்டும்.
 3. ஆண்கள்தலையை மறைக்க கூடாது-தூங்கும்போதும் ?
 4. ஹஜ்ஜின்சட்டங்களைமுன்பே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் இதனால் அங்கு டென்ஷன்குறையும்மற்றவர்களுக்கும்  நீங்கள் உதவலாம்.
 5. இருமல்சளிக்கான மருந்துகளை பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச்செல்லுங்கள்.
 6. உங்கள் லக்கேஜ் நீங்கள் அமரும் பஸ்ஸில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.வேறு பஸ்ஸில் இருந்தால்அவசரத்துக்குகிடைக்காது !!குழந்தைகள் இருந்தால் ரொம்பஅவசியம்.
 7. கொஞ்சம்பஞ்சைஎடுத்துகொள்ளவும். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ளஉதவும்.
 8. சாதாரணகாய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்எடுத்துச் செல்லுங்கள்.
 9. முடிந்த அளவுஎப்பொழுதும் ஒளுவுடன் இருந்தால் நேரத்தில் தொழமுடியும்.
 10. கால்களுக்குஅதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல்கவனித்துக்கொள்ளுங்கள்  ஹஜ்ஜுக்கு முன்நடைப்பயிற்சி மிகமிகஅவசியம்.
 11.  புதுச்செருப்புகள்எச்சரிக்கை !
 12. எண்ணெய் மிகுதியானஉணவைதவிர்த்துகொள்ளவும்.
 13. ஆண்களுக்கு – தூங்கும்போதும்,மற்ற நேரங்களிலும் உடலில் மறைக்க வேண்டிய இடங்களை கவனம்இருக்கட்டும்.(இஹ்ராம் ஆடை)
 14. இரண்டு செட்இஹ்ராம் ஆடைகளைஎடுத்துகொள்ளவும் –ஆண்களுக்கு.
 15. மொட்டைஅடிக்கும் போது அதற்காக நியமிக்கபட்டிருக்கும்ஆட்களிடம்செல்லவும் !! ??
 16. தேவையான அளவுபணம் வைத்துகொள்வது அவசியம் !!!
 17. மற்றவர்களுக்காக கல் எறிபவர்கள் முதலில் தனக்காக கல் எறிந்துவிட்டு பிறகுமற்றவர்களுக்கு கல் எறியவேண்டும் !
 18. அரஃபா தினத்தில் இறைவனைத் தியானித்தல், குர்ஆன் ஓதுதல், பிராத்தித்தல்ஆகியவற்றை அதிகப்படுத்துவது சுன்னத்தாகும்(சொற்பொழிவைகேட்பதைவிட .?)
 19. ஷாப்பிங் செய்வதை ஹஜ் முடிந்தபின் வைத்துகொள்ளவும்.

20. மூடநம்பிகைகளை தவிர்த்துகொள்ளவும்….???

21. தேவை இல்லாமல்சுற்றி நேரத்தை வீனாக்காமல் திக்ரு செய்வது சிறந்தது.

22. வீணான பேச்சுக்கள் – தர்க்கங்களிலிருந்துவிடுபட முடியுமா உங்களால் ? சைத்தான் இதர்க்காகவே முழு முயற்சி செய்கிறான்.

23. குழந்தைகளுக்கு diapers தேவையான அளவு !

24. அடையாள அட்டை எபொழுதும் கழுத்தில் இருக்கட்டும்   டெண்ட்டிற்கு திரும்பும் போது இதை   கேட்பார்கள்.

25. மொபைல் பேச்சு குறைத்துக்கொள்ளவும் .

26. குளிர்ந்த நீர்/பானங்கள் குடித்தால் கண்டிப்பாக தொல்லைதான்

27. இரவு தொழுகை- உங்களுக்கே தெரியும் இதன் முக்கியத்துவம் .

28. யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது.(அரஃபா தினத்தில்).

29. இலவசமாக கிடைக்கும் பொருட்களுக்கு நேரத்தை வீணாக்கவேண்டாம்.

30. அருகருகே கூடாரங்களை தவறவிட்டவர்களுக்கு சவுதி சாரணர்கள் மூலம் வழிகாட்டும் ஏற்பாடு உள்ளது.

31.  ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதிடுங்களேன் பார்க்கலாம் ?

32.  ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொடுவதற்கு நேரம் செலவழிக்க வேண்டாம்.

33. மக்கா மற்றும் மதீனாவின் பிற இடங்களிலும் உள்ள மண்ணைப் புனிதம் என்று கருதி அள்ளி வரவேண்டாம்.(மிகப்பெரிய பாவம் !)

34.மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக  மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.

35. சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள்.பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள்   நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

 36.இஹ்ராம் என்றால் குறிப்பிட்ட சில வார்த்தைகளை கூறுவதாகும்  அப்போது குறிப்பிட்ட  ஆடை அணிந்து இருக்கவேண்டும்.குறிப்பிட்ட  ஆடை அணிவது மட்டும் இஹ்ராம் அல்ல .

37. மக்கள் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் செய்பவர்களுக்கு..  அவர்கள் எதிர்பார்த்த புகழ் உலகிலேயே கிடைத்து விட்டது என்று இறைவன் கூறுவான் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள் .

38.மீகாத் என்றால் எல்லை என்றுப் பொருள்.

39. வீணான விவாதங்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது ,கெட்ட வார்த்தைகள் பேசுவது…எல்லாம் சோதனை தான் .

 

உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். சுறுசுறுப்பாக வணக்கவழிபாடுகளில் ஈடுபடுங்கள்! உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன்ஆக்கியருள் புரிவானாக!

1. ஒரு தொலைபேசி அழைப்பு, புதியதொரு இலக்கம். அவள் பதிலளிக்கவில்லை. மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு வருகின்றது. அவள் பதிலளிக்கவில்லை. இவ்வாறு பல தடவைகள் அதே இலக்கத்திலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் அவள் பதிலளிக்கவில்லை. அழைப்பை மேற்கொண்டவன் சலிப்படையவில்லை. அவளோடு பேசவேண்டுமென்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவளுக்குப் பின்னால் அழைந்து திரிந்தான். இறுதியாக அவள் ஒருநாள் அவனுடன் பேசுவதற்காக நின்றாள். அவன் தனது ஏக்கங்களை, கவலைகளை சொன்னான். அவன் அவளை மிகவும் அதிகமாக விரும்பினான். அவனது உள்ளம் முழுவதும் அவளே நிறைந்திருந்தாள். அவன் பேசுவதை அவன் கேட்காவிட்டால் தன்னை அழித்துக் கொள்வதாக அவன் சொன்னான். அவளுக்கு அவன்மீது இரக்கம் ஏற்பட்டது. அவனுடைய பேச்சைக் கேட்டாள். எவ்வளவு இரக்கம் கொண்டவனாக அவன் இருக்கின் றான் என்பதை அவள் அறிந்து கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஷைத்தான் அவளை ஆக்கிரமித்தான். அந்த இளைஞனுடன் அவள் தொலைபேசியில் உரையாடலானாள். பின்னர் இருவரும் பாதைகளிலும் சந்தித்துக் கொண் டனர். அவர்களுக்கிடை யில் காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் பாவங் கள் நிகழ்ந்தன. பிறகு அவன் அவளை விட்டுவிட்டு வேறொரு இரையைத் தேடிச் சென்றுவிட்டான்.

2. இன்னொரு இளைஞன் ஒரு யுவதியைப் பார்க்கின்றான். அவளோடு நட்பாகவும் அன்பாகவும் பேசுகின்றான். அவளும் உரையாடலில் கலந்துகொள்கின்றாள். காலம் செல்கின்றது. அவர்களுடைய நட்பு திருமணம் போன்று மாறிவிட்டது. ஆனால், அவர்கள் திருமணம் முடிக்கவில்லை. அவளுடைய உடலிலே உணர்ச்சியின் நெருப்பு பற்றியெரிந்தது. முடிவு எப்போதும்போல இழிவானதும் அவமானமானதுமாக அமைந்தது.அவன் அவளைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டான். பொறுப்பாளரின் அனுமதியின்றி அவனது கைப்பட எழுதிய திருமண ஒப்பந்தத்தை மறைத்துவிட்டான். அவள் ஒரு தந்தையில்லாத குழந்தைக்கு தாயாகின்றாள். பின்னர் எதிர்காலம் சூனியமானநிலையில் அவள் தனது காலத்தை கழிக்கின்றாள்.

3. குடும்ப சந்திப்புகளின் போது இரண்டு குடும்ப அங்கத்தவர்களும் பரஸ்பரம் நல்ல முறையில் உரை யாடிக் கொள்கின்றனர். இரு குடும் பத்தவர்களினதும் பிள்ளைகளும் சகோதர சகோதரிகளாக பழகிக் கொள்கின்றனர். அவர்களில் ஒரு இளைஞனுக்கும் யுவதிக்குமிடையில் நெருக்கம் அதிகரிக்கின்றது. பின்னர் தொலைபேசி ஊடாகவும் தொடர்புகள் நீடிக்கின்றன. அதன் பின்னர் அவளுக்கு துயரங்களும் வேதனைகளும்தான் எஞ்சியிருக்கின்றன.

4. இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களது குடும்பங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். அவன் அவளது கணவனுக்கு சகோதரன் போலாவான். அவள் அவனது மனைவிக்கு சகோதரி போலாவாள். அவர்களுக்கிடையில் நட்பு ஏற்பட்டது. அவள் கணவனை விட்டுவிட்டாள். வளரும் பருவத்திலிருந்த பிள்ளை களை விட்டுவிட்டாள். தனது உள்ளத்தை கணவனின் நண்பனிடம் இழந்து விட்டாள். கணவனிடம் விவாகரத்துக் கோரினாள்.

மேற்கூறிய சம்பவங்கள் எமது சமூகத்தில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. இந்த அழுக்குகளை விட்டும் எமது சமூகத்தை பாது காக்க வேண்டியிருக் கின்றது.அன்பிற்குரியவர்களே அல்லா ஹுத்தஆலா முஸ்லிம் பெண்ணிற்கு ஒரு தங்க கிரீடத்தை ஏற்படுத்தியிருக்கின்றான். அவள் அதன்மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதோடு ஏனையவர்களையும் பாதுகாக்கின்றாள். அந்த கிரீடம்தான் ஹிஜாப் ஆகும்.

அது அவளது தூய்மையையும் அவளது கற்பையும் அவளது பார்வையையும் ஏனையவர்களின் பார்வை அவள்மீது விழுவதையும் தடுக்கின்றது.இந்த கிரீடத்தின் கருத்து இஸ்லாம் பெண்ணுக்களித்துள்ள கண் ணியமும் பாதுகாப்புமாகும். சில மேற்கத்தேய வாதிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சொல்வது போல ஹிஜாப் அவளுக்கு ஒரு சிறையல்ல. அவளுடைய உரிமைகளை அது குழிதோண்டிப் புதைக்கவில்லை. மாற்றமாக அது தான் அவளது சுதந்திரத்தின் இரத்தினமாக இருக்கின்றது. அதனால் தான் அவள் சமூகத்தில் கண்ணியத்துடன் நடமாடுகின்றாள்.

அல்லாஹ்மீது ஆணையாக மேற்கத்தேயவாதிகளே!
உங்களுடைய முயற்சி யின் மூலம் பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்களா? அல் லது அவர்களை நிர்வாணப்படுத்தியுள்ளீர்களா? பெண்களை நிர்வாணப் படுத்தி அவர்களுக்கு பல சமூக நோய்களை ஏற்படுத்தியுள்ளீர்கள். மேற்கத்தேய பெண் ஒரு வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறாள். அவர்களுடைய பார்வைகளும் கரங்களும் உடல்களும் அவளை இம்சிக்கின்றன. இதனால் தான் இன்று மனித சமூகம் எதிர் நோக்கியுள்ள மிகப் பெரிய அழிவுகளுக்கு தீர்வுகளை தேட வேண்டிய நிலைமை மேற்கிற்கு ஏற்பட்டுள்ளது.ஆனால், இஸ்லாமிய சமூகம் அதன் ஹிஜாபுடன் இருக்கும் காலம் வரை பாது காப்பாக இருக்கும். அது குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் குழந்தை வளர்ப்பிற்கும் கணவனின் பெறுமதிக்கும் உதவி செய்கின்றது.நாம் ஷரீஆவின் வரையறைகளை மீறி ஆண், பெண் கலப்பதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

எங்களுடைய குழந்தைகளுக்கு ஆபத்தான மரணத்தை நாம் ஏற்படுத்தி விடுகின்றோம். எங்களுடைய யுவதிகள் தமது கற்பையும் வெட்கத்தையும் இழந்துவிடுகின்றனர். எங்களுடைய இளைஞர்கள் தமது இளமையையும் ஆண்மையையும் இழந்து விடுகின்றனர். எனவே, எமது சமூகம் அதிகமான சக்திகளை இழந்துவிடுகின்றது.கற்பும் தூய்மையும், வழிகேடான பித்னாவை ஏற்படுத்துகின்ற இடங்களிலி ருந்து விலகி நிற்பதும் அல்லாஹுத்தஆலாவின் ஷரீஆவை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதும் இந்த சமூகத்தை அபி விருத்தியடைந்த நாகரிக முள்ள சமூகமாக மாற்றும்.அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்; நபியே நீர் முஃமினான ஆண்களுக்குக் கூறு வீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ் தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிகவும் சிறந்த தாகும். நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா அவர்கள் செய்பவற்றை நன்கறிந்த வனாக இருக்கின்றான்.

நபியே நீர் முஃமினான பெண்களுக்குக் கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்.தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். அவர் கள் தமது அழகி லிருந்து இயல்பாக வெளிப்படுபவற்றைத் தவிர ஏனையவற்றை மறைத்துக் கொள்ளட்டும். தமது மேற்சட்டைகளின் மீது முந்தானைகளை போட்டுக் கொள் ளட்டும். அவர்கள் தமது அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தை யர் அல்லது தம் கணவர்களின் தந்தையர் அல்லது தம் பிள்ளைகள் அல்லது தம் கணவர்களின் பிள்ளைகள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோத ரர்களின் பிள்ளைகள் அல்லது சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது தங்களுடைய பெண்கள் அல்லது தம் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது பெண்கள் மீது விருப்பற்ற பணியாளர்கள் அல்லது பெண்களின் மறைவான உறுப்புகளை தெரிந்து கொள்ளாத சிறுபராயத்தையுடைய சிறுவர்கள் ஆகியோரைத் தவிர வேறெவருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்.

மேலும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவ தற்காக தம்முடைய கால்களை (நிலத்தில்) அடிக்கவேண்டாம். விசுவாசிகளே நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் மீண்டும் தௌபாச் செய்யுங்கள்.

இந்தக் கட்டுரையை ஒரு சகோதரி ஒரு சஞ்சிகை ஒன்றிற்காக கண்ணீருடனும் கைசேதத்துடனும் எழுதிய கடிதத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகின்றேன். அல்லாஹ் அவளுடைய பாவங்களை அவளுடைய தௌபாவிற்காக மன் னிக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம். அவளுடைய கதையில் எமக்கு படிப்பினை களும் உபதே சங்களும் இருக்கின்றன. அதுவே அல்லாஹ் அவளுக்கு பாவமன் னிப்பு வழங்குவதற்கு காரணமாக இருக்கலாம். அல்லாஹ் அவளை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்எனக்கு எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை.நான் எனது பேச்சை எங்கு முடிக்க வேண்டுமென்பதையும் அறியவில்லை.நான் மிகக் கசப்பான நிமிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது வாழ்க்கையில் மிகவும் கஸ்டமான பருவங்களில் நான் வாழ்ந்துகொண்டிருக் கின்றேன்.எனது கடிதத்தை நீங்கள் வாசித்தால் எனது கஷ்டங்களை அறிந்துகொள்வீர்கள்.பேனையின் மூடியை கழட்டுகின்றேன். எனது அனைத்து சக்திகளையும் எனது கவலைகளை கண்ணீரை எழுதுவதற்காக திரட்டுகின்றேன்.

உங்களது சஞ்சிகை யில் ‘சவூதி அறேபியாவின் எயிட்ஸும் அதற்கான காரணங்களும் யதார்த்தங் களும்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன்.அந்தத் தலைப்பு என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. நீங்கள் என்னை விளங்கி யிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நான் அந்த சஞ்சிகையின் நான்கு பிரதிகளை பணம் கொடுத்து ஏன் வாங்கினேன் என்பதை அறியவில்லை. சிலவேளை அந்தத் தலைப்பில் எனது பெயரையும் நான் கண்டது காரணமாக இருக்கு மென்று நம்புகின்றேன்.

என்னை ஒதுக்கிவிட வேண்டாம். ஆம், உண்மையில் நான் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவள். நான் மரணத்தினை எதிர்பார்த்திருக்கின்றேன்.நான் சாப்பிடுவதில்லை. நான் குடிப்பதில்லை. அல்லாஹ்வின் நெருக்கத்தினைத் தவிர வேறு எந்த சுவையையும் நான் அறியவில்லை.

நான் தொழும் போது உண்மையான உணர்வை உணர்கின்றேன். நான் சுவனத்தில் நுழைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். சிலவேளை எனது எஞ்சிய வாழ்க்கையில் நான் தேடுகின்ற சந்தோசத்தை கண்டுகொள்ளலாம்.ஆம், உண்மையில் நான் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவள். சிலவேளை இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சோதனையாக இருக்கலாம். ஏனெனில் அதன் மூலம் சரியான பாதைக்கு நான் திரும்பியிருக்கின்றேன்.

நான் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை ஒருபோதும் சொல்ல மாட்டேன். நான் அதனைப் பற்றி சொல்வதற்கு வெட்கப்படுகின்றேன்.என்றாலும் இஸ்லாமிய யுவதிகளே உங்கள் இரட்சகனின் பால் மீண்டுவிடுங்கள். எல்லா விடயங்களும் அழிந்துவிடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். யுவதிகளே ஹராமான இன்பங்களைவிட்டும் தூரமாகிக் கொள்ளுங்கள். அல்லா ஹுத்தஆலாவிற்கு கட்டுப்படுவதை விட்டுவிடுவதிலிருந்தும் தூரமாகிக் கொள்ளுங்கள்.

நான் உங்களுக்காக, நீங்கள் உங்கள் மார்க்கத்தின்பால், உங்கள் குடும்பத்தின்பால், உங்கள் கணவனின் பால் திரும்புவதற்காக பிரார்த்திக்கின்றேன். யார் அல்லாஹ்வுக்காக ஒரு செயலை விட்டு விடுகின்றாறோ அல்லாஹுத்த ஆலா அவருக்கு அதனை விட சிறந்ததொன்றைக் கொண்டு ஈடு செய்வான்.

இஸ்லாமிய யுவதிகளே விழித்துக் கொள்ளுங்கள்.
மார்க்கமும் அதனைப் பற்றிப் பிடித்துக் கொள்வதும்தான் உங்கள் வெற்றிக்கான உண்மையான பாதையா கும். எனக்காக பிரார்த்தியுங்கள். எனக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்க வேண்டுமென்பதற்காக பிரார்த்தியுங்கள்.

உங்கள் இஸ்லாமிய சகோதரி மனார்
thx meelparvai

http://www.facebook.com/note.php?note_id=10150186779555019

அளவற்ற அருளாளனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்…. நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..

1.படைப்புகளின்மீது இரக்கம் காட்டுவது:
 
 ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 

நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லைஎன்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

 

2.பிறரை மன்னிப்பது:

 

மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும்.

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 3:134)

நபி (ஸல்) அவர்கள் தனக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தனுப்பிய யூதப் பெண்ணை மன்னித்தார்கள்.

நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான” (4:149)

மன்னித்தல் இதயத்திற்கு நல்லது

 

பிரிட்டன் மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வில் மன்னிப்பு கேட்பது, மாத்திரைகள் விழுங்குவதைத் தவிர்க்க சிறந்த மருந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது

 

3.கர்வம்

நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை” — குரான் 4:36

ஷைத்தான் அல்லாஹ்வின் கட்டளையை கர்வத்தால் மீறினான் அவன் நிலைமை என்னவாயிற்று ?

4.பொறுப்பை நிறைவேற்றுதல்

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5.பொறுமை

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கின்றார்களே அத்தகையோரைத்தவிர. (அல்குர்ஆன் 103: 1-3)

6.செய்த உபகாரத்தைச் சொல்லிக்காட்டுதல்.

அல்லாஹ் கூறுகிறான்:

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:

‘மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:

1) பெற்றோரை நிந்திப்பவன்
2) மதுவில் மூழ்கியிருப்பவன்
3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.

ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்

“சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயி, திர்மிதி)

7.நன்றி பாராட்டல்


8. பொறாமை

பொறாமை கொள்வது இறையச்சமுடைய முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற குணமாகும். நபி (ஸல்) அவர்கள் பொறாமை என்ற இழிகுணத்தைப்பற்றி வன்மையாகக் கண்டித்துக் கூறினார்கள்: “ஒர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது.” (ஸஹீஹ் இப்னு ஹ்ிப்பான்)

 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ழமுரா இப்னு ஸஃலபா (ரழி) அறிவிக்கிறார்கள்: “மனிதர்கள் தங்களுக்குள் பொறாமை கொள்ளாத காலமெல்லாம் நன்மையின் மீதே நிலைத்திருப்பார்கள்.” (முஃஜமுத் தப்ரானி)

ஒரு மனிதருக்கு வரும் பெரும்பாலான வியாதிகளுக்கு இதுவே காரணம் !!! 
9.கோபம்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (மிஷ்காத்)

கோபப்படும் போது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்சிசால் எனும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகச் சுரந்து விடுகிறது. இது மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்துகிறது .

கோபம் !! உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

10.ரகசியம் காப்பது

ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார்.